Commonly mispronounced words in Tamil
January 5, 2023 2023-11-17 9:42Commonly mispronounced words in Tamil
Commonly mispronounced words in Tamil
There are a lot of Tamil words that are often mispronounced. Learn to identify, validate, and correct them accordingly
Tamil is one of the oldest languages on earth. There are 18 consonants and 12 vowels which in turn forms 216 consonant vowels. There is also one aayudham letter which in turn adds to form 247 characters in total. When they join together to form words, there could be changes in pronunciation and some words could be mispronounced.
There are more than 3.5 lakh words and this is way higher than that in the English language?
Beyond, Tamil language has more than 23 slangs or what we call dialects. For information, refer to our article on Tamil slang words every Indian must know.
The complications in pronouncing similar letters can be overcome by learning by following a systematic, structured approach. Knowing each and every letter individually with its proper pronunciation and applying your efforts towards this pronunciation skill is essential to master the Tamil language.
A detailed and classified study of Tamil phonetics will help you and your children pronounce the words precisely. This blog puts forth commonly mispronounced words and their correct pronunciation.
Common mispronounced words and sounds in Tamil
ல, ள, ழ, கர உச்சரிப்பு
ஒற்றல் ல- கரம், வருடல் ள -கரம் மற்றும் சிறப்பு ழ – கரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ழ-கரம் தமிழுக்கு சிகரம். எந்த ஒரு மொழியிலும் இவ்வாறான ஒலிப்பு முறை இல்லையென்று மொழியியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
“வாங்க பழகுவோம்” என்று நாம் அழைப்பதற்கு முன்னர் நாம் ழ- கரத்தை சரியான முறையில் உச்சரிக்க பழக வேண்டும்.
‘தமிழ்’ என்ற சொல்லில் உள்ள ழ-கரத்தயே பலர் தவறாக உச்சரிக்கின்றனர. உதாரணமாக, ‘ஒலி’ என்றால் ஆங்கிலத்தில் sound என்று அர்த்தம், ‘ஒளி’ என்றால் light, ‘ஒழி’ என்றால் eradication. ல, ள, ழ-கரங்களை ஒன்று போல உச்சரிப்பது தவறு.
விதிகள்
- ல-கரத்தை உச்சரிக்கும் போது நாக்கின் நுனி மேல் வரிசை முன் பல்லை தொட்டு ஒற்ற வேண்டும். எடுத்துக்காட்டு: கல்
- ள-கரத்தை உச்சரிக்கும் போது நாக்கை மடித்து வைத்து மேல் அன்னத்தை வருட வேண்டும். எடுத்துக்காட்டு: உள்ளம்
- ழ-கரத்தை உச்சரிக்கும் போது நாக்கை மடித்து வைத்து அடி அன்னத்தை தொட்டு வருடி சுழன்று வர வேண்டும். எடுத்துக்காட்டு: தமிழ்
இந்த உச்சரிப்பு முறையை சிறு வயதிலேயே பிள்ளைகளுக்கு கற்று கொடுத்தல் மிகவும் அவசியம். சிறப்பு கவனம் கொடுத்து பயிற்சியளிக்க வேண்டும். அவர்களுக்கு எளிதில் நா பிறழ வேண்டும். நா பிறழ் பயிற்சி அளிக்க வேண்டும். Toungue twisters பலவற்றை உச்சரிக்க ஊக்குவித்தல் சிறப்பு.
- துளி துளி பனித்துளி
கிளி கிளி பசுங்கிளி
களிகளி கண்டுகளி
விழி விழி கருவிழி
- உளி பெருக சிலை அழகு அலை உலவ கடல் அழகு
- மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல்லவர்
- யார் தச்ச சட்டை தாத்தா தச்ச சட்டை
- வாழைப் பழம் அழுகி நழுவி குழ குழ வென்று கீழே விழுந்தது.
2. ர,ற, கர உச்சரிப்பு
ற மற்றும் ர ற வரிசை எழுத்துகள் எழுதப்படும் போது குழப்பம் உண்டாகிறது. அதை தீர்க்க தெளிவாக பயில வேண்டும்.
இந்த இரண்டு எழுத்துக்களையும் இடையின ர வல்லின ற என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டும். இவற்றுள் மொத்தம் பதினோரு விதமான வேறுபாடுகள் உண்டு.
- முதலில் உச்சரிக்கும் முறை. இடையின ர வை உச்சரிக்கும் போது நாக்கு மேல் அன்னத்தின் முன் பகுதியை தொட வேண்டும். வல்லின ற வை உச்சரிக்கும் போது நாக்கு மேல் அன்னத்தின் நடுப்பகுதியைத்தொட வேண்டும். ர-மரம், ர்-பார்வை, ற-பறவை, ற்-காற்று என்ற வார்த்தைகள் எடுத்துக்காட்டுகள் ஆகும்.
- பிறமொழி சொற்களை தமிழில் எழுதும்போது இடையின ர மட்டுமே வர வேண்டும். உதாரணமாக இரயில், அலமாரி, லாட்டரி, டாக்டர், டம்ளர், கார், டயர், டிரைவர், தியேட்டர், ரிமோட், நம்பர், போன்ற சொற்கள்.
- தொல்காப்பிய விதிப்படி சொல்லின் முதல் எழுத்தாக இடையின ர வல்லின ற இவை இரண்டுமே வராது. அரங்கநாதன், இரயில், இரத்தம் உரோமம் என்று எழுத வேண்டும்.
- ற ன் உடன் வரும். ர ன் உடன் வராது. நின்றான், நன்றி என்ற சொற்கள் போன்று.
- ற்-தன் உயிர்மெய்யோடு சேரும், ர் -தன் உயிர்மெய்யோடு சேராது. குற்றம், வெற்றி, சுற்று என்பவை சரியான வார்த்தைகள்.
- ர்-க்குப் பிறகு மெய்யெழுத்து வரும். ற்-க்குப் பிறகு மெய்யெழுத்து வராது. வளர்ச்சி, மலர்ந்தது, வளர்ந்து, தேர்ச்சி, பயிற்சி, விற்பனை, ஏற்காடு முயற்சி ஆகியவை சரியான வார்த்தை அமைப்புகள். பயிற்ச்சி, முயற்ச்சி, ஏற்க்காடு, விற்ப்பனை என்பவை தவறான சொற்கள்.
- படர்கை சொற்களில் ற வரும். சென்றார், நின்றார், ஆடுகிறார் என்ற சொற்களை போல. சென்ரார், நின்ரார், ஆடுகிரார் என்று கூறுவது தவறு.
- பலர்பாலை குறிக்கும் சொற்களில் ர் -வரும், ற்-வராது. அவர்கள், வந்தார்கள், ஆசிரியர்கள் என்பவை சரியான சொற்கள். தவறான சொற்கள் இவை, அவற்கள், வந்தாற்கள், ஆசிரியற்கள்.
- ர் -க்குப் பின் க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ மட்டுமே வரும். ற்-க்குப் பின் க, ச, ப, ற போன்ற சொற்கள் மட்டுமே வரும்.
அவர்கள், நிற்கவும், ஊர்வன, முயற்சி, பார்வை, மற்றும், வரிசை, கற்பனை, காற்று என்பவை எடுத்துக்காட்டுகள்.
- இறுதி எழுத்தாக ர்-வரும், ற்-வராது. பார், வேர், மலர், ஊர் என்பவை சிறந்த உதாரணங்கள். பாற், ஊற், வேற், மலற் என்று கூறுவது தவறு.
- ர-உயர்ந்த, பெருகும் கருத்து உடையது. ற-குறைந்த, குறுகிய கருத்து உடையது.
பெரிய – சிறிய, உயர்வு – குறைவு, அருமை – சிறுமை,பிறப்பு- இறப்பு, கரை- கறை, ஒரு – ஒறு, அரி – அறி, பரி -பறி ஆகியவை உதாரணங்கள்.
3. ண,ன,ந கர உச்சரிப்பு
ன என்பது றன்னகரம், ண என்பது டண்ணகரம், ந என்பது தந்நகரம்.
விதிகள்
- ண-கரத்தை உச்சரிக்கும் போது நாக்கின் நுனியானது மேல் வாயின் நடுப்பகுதியை தொட வேண்டும்.
- ன-கரத்தை உச்சரிக்கும் போது நாக்கின் நுனியானது மேல் வாயின் நுனி பகுதியை தொட வேண்டும்.
- ந-கரத்தை உச்சரிக்கும் போது நாக்கின் நுனி பகுதி முன்னே மடிந்து பல்லும் மேல் வாயும் சேர கூடிய இடத்தில் தொட வேண்டும். இதற்கு இரண்டு ஒலி உண்டு. ஒரு விதத்தில் ந் என்று ஒலியில் இன்னொரு இடத்தில் ன் என்ற ஒலியில். எடுத்துக்காட்டாக அந்த, இந்த, எந்த, அந்நாடு, இந்நாடு, எந்நாடு போன்ற வார்த்தைகள் . இந்த வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக தமிழில் பதினெட்டு மெய்யெழுத்துக்களும் சொல்லின் முதல் எழுத்தாக வராது. அதுபோல இந்த மூன்று வித நகரங்களும் புள்ளி வைத்த மெய் எழுத்தாக சொல்லின் முதலில் வராது. ந மட்டும் உயிர் மெய் வடிவில் வரும். நன்றி, நிதி, நீர், நுகர்வோர், நூல், நெற்றி, நேரம், நைதல், நொடி, நோட்டம் என்பன போல.
சொல்லின் இறுதியில் இந்த மூன்று எழுத்துக்களும் மெய் வடிவில் இடம்பெறும். மண், கண்ணன், வெரிந் என்பன போல. சொல்லின் இறுதியில் டண்ணகரம் உயிர்மெய் வடிவில் இடம் பெரும். எண்ணு, பண்ணை, தென்னை என்பன போல.
இடையில் ன வரும் போது க,ச,ஞ,ப,ம,ய,வ, ற இவ்வெட்டு எழுத்துக்கள் மட்டுமே இடம் பெரும். அவ்வாறு வரவில்லை என்றல் அது பிழை. மான்கள், நன்மை, புன்செய், பொன்யாது, புன்ஞமலி, பொன்விழா, தென்றல் என்பன போல. இடையில் ண வரும் போது க, ச, ஞ, ட, ம, ய, வ, ட இவ்வெட்டு எழுத்துக்கள் மட்டுமே இடம் பெரும். கண்காட்சி, உண்மை, மண்சாலை, வெண்ஞமலி, மண்டபம், கண்வலி, பண்பாடு, மண்யாது என்பன போல.
றன்னகரம் வரும்போது அதற்கு அடுத்த படியாக வல்லின றகரம் மட்டுமே வரும். டண்ணகரம் வரும்போது அதற்கு அடுத்த படியாக டகரம் மட்டுமே வரும். சென்றான், கண்டான் என்பது சரியான வார்த்தைகள்.
ந-இடையில் வரும் போது த, ய என்ற எழுத்துக்கள் மட்டுமே பின்வரும். வந்தான், தந்தை, சிந்து, வெரிந்யாத என்பன போல.
புணர்ச்சியின் பொது ன், ற் என்று மாறும்.
பொன்+காசு=பொற்காசு, பொன்+பாதம்=பொற்பாதம் என்பது போல. புணர்ச்சியின் பொது ண், ட் என்று மாறும். எடுத்துக்காட்டாக கண்+புலன்=கட்புலன்
மண்+பாண்டம்=மட்பாண்டம்.
சில இடத்தில் றன்னகரமும் டண்ணகரமும் புணரும் போது மாற்றம் எதுவும் இன்றி புணரும். உதாரணமாக
பொன்+விழா=பொன்விழா, பொன்+மனம்=பொன்மனம், மண்+மேடு=மண்மேடு,கண்+வலி=கண்வலி.
Learn Tamil Online
Tamil phonetics is taught to kids using elaborate Tamil வாய்ப்பாடு as a part of our online Tamil classes. It details the formation of 216 vowel consonants from the respective root vowels and consonants. At Powerkid Tamil Academy, we help children learn Tamil online from anywhere, anytime. We offer access to unlimited learning resources, visual tools, and study materials to aspirants who enrol to our online Tamil classes.
We provide students with worksheets and other practice books online to enable them to work towards enriching their vocabulary anywhere, anytime. Our qualified teachers give one-on-one attention to kids to keep track of their progress and effectively combat their learning gaps. The classes are purely customised to students needs for better utilisation of time.
Tamil learning is no longer a difficult task. We have made it easy and effortless to learn Tamil through our online Tamil classes. If you are someone who has settled abroad and worried that your child is not having the exposure to learn Tamil right, our online Tamil classes are the most appropriate.