Blog

அடைமொழி(Adjective) என்றால் என்ன?

அடைமொழி(Adjective) என்றால் என்ன?
Tamil Language

அடைமொழி(Adjective) என்றால் என்ன?

Adjectives in English are called அடைமொழி in Tamil. Learn more about the types of adjectives and how they are used to frame sentences.

In English, using adjectives add more meaning to the lives. Without adjectives, it would be boring, mundane and dull. In this blog, we will present more details on how adjectives are framed and used in the Tamil language. Powerkid Tamil Academy is committed to imparting Tamil to children and adult learners from across the world through online Tamil classes

On the request from our learners, we have curated intricacies of Tamil grammar. The blog presents deeper details on Adjectives in Tamil and how they are used to make sentences. 

In English, adjectives are used as describing words. They are used to provide more information about the noun. This could be about the colour, appearance, size, age, and many more.  

What is an adjective? அடைமொழி என்றால் என்ன?

Adjectives are called அடைமொழி in Tamil. அடைமொழி என்பது ஒருவருடைய (noun-பெயர்ச்சொல்) குணம், சிறப்பு அல்லது சிறப்பின்மைகளை விளக்க பயன்படுகிறது.பெயர்ச்சொல் மட்டும் அல்லாமல், வினைச்சொல்லை (verb) விளக்கவும் பயன்படுகிறது.

ஒரு வாக்கியத்தை விரிவாக எழுதவும், அதில் உள்ள உறுப்புகளான, வினையையும், பெயர்ச் சொல்லையும் விவரிக்கவும் பயன்படுகிறது.

வேற்றுமை பற்றி அறிய

என்னிடம் வீடு உள்ளது.  – Has no adjective

என்னிடம் பெரிய வீடு உள்ளது. – Has an adjective.

மேலே உள்ள வாக்கியங்களில், முதல் வாக்கியத்தில் வீடு என்று மட்டுமே உள்ளது. ஆனால் இரண்டாவது வாக்கியத்தில், பெரிய வீடு என்பது வீட்டின் அளவையும், சிறப்பையும், அதன் தனித்துவத்தையும் குறிக்கிறது. ‘பெரிய’ எனது அடைமொழி ஆகும். 

Types of Adjectives – அடைமொழியின் வகைகள்

அடைமொழி என்பது நாம் உபயோகிப்பதை பொறுத்து இரு வகைப்படும். 

  1. பெயரடை
  2. வினையடை

ஒரு வாக்கியத்தில், பெயர்ச்சொல்லின் சிறப்பை குறிக்க பயன்படுத்தினால், பெயரடை என்று இலக்கணத்தில் சொல்லப்படுகிறது. 

இதே, ஒரு வாக்கியத்தில், வினைச்சொல்லின் சிறப்பை குறிக்க பயன்படுத்தினால், வினைய‌டை என்றும் சொல்லப்படுகிறது. 

பெயரடை – Adjectives that describe a noun

உதாரணத்திற்கு, 

சுதா ஒரு மாணவி- Sudha is a student.

சுதா ஒரு திறமையான மாணவி.- Sudha is a talented student. 

முதல் வாக்கியத்தில் அடைமொழி இல்லை. சுதா ஒரு மாணவி என்று மட்டுமே சொல்கிறோம். ஆனால் இரண்டாவது வாக்கியத்தில் சுதா ஒரு திறமைசாலி என்பது அவரின் சிறப்பை குறிக்கிறது.

சுதா என்னும் பெயர்ச்சொல்லின் சிறப்பை குறிக்கிறது. அதனால், இது பெயரடை என்று தமிழ் இலக்கணத்தில் பொருள்படுகிறது.

பெயரடை என்பது இரு வகைப்படும்.

  • தனிப்பெயரடை
  • ஆக்கப் பெயரடை

1.1 தனிப்பெயரடை

பெயர்ச்சொல்லை குறிக்க அடைமொழியை பயன்படுத்தும் போது, வாக்கியத்தில் உபயோகிக்கப்படும் பெயரடை தனிச்சொல்லாக அமைந்தால், அது தனிப்பெயரடை என்று கொள்ளப்படும்.

உதாரணத்திற்கு, 

  • நல்ல மாணவன்,
  • சிறந்த புத்தகம்,
  • நல்ல பழக்கம்,
  • சிறிய வீடு.

பெரும்பான்மையான சமயங்களில் தனிப்பெயரடை, அ என்னும் விகுதி வரும்படி முடிவடையும். உதாரணத்திற்கு,    நல்ல(அ), சிறந்த(அ), சிறிய(அ), புதிய(அ), பழைய(அ), கெட்ட(அ).

1.2 ஆக்கப்பெயரடை

பெயர்ச்சொல்லை குறிக்க அடைமொழியை பயன்படுத்தும் போது, வாக்கியத்தில் உபயோகிக்கப்படும் பெயரடை கூட்டுச் சொல்லாக அமைந்தால், அது ஆக்கப்பெயரடை என்று கொள்ளப்படும்.

  • இனிமையான நாட்கள்
  • அன்பான நண்பன்
  • அழகான மான்

இங்கே உள்ள பெயரடைகளான, ‘இனிமையான’, ‘அன்பான’, ‘அழகான’, என்பவற்றை, இனிமை+ஆன, அன்பு+ஆன, அழகு+ஆன, என்று கூட்டுச் சொற்களாக அமைந்துள்ளன. இது போன்று, பிரித்து புரிந்து கொள்ள கூடிய பெயரடைகளை ஆக்கப்பெயரடை என்று இலக்கணத்தில் சொல்கின்றனர்.

ஒரு பெயர்ச்சொல்லின் பண்பையும், குணத்தையும் குறிக்கும் பெயரடைகள் தனிச் சொற்களாக இல்லாமல்,  ‘ஆன’ என்ற ஆக்க விகுதி சேர்ந்து வருகிறது. 

More examples, 

  • வலிமையான இதயம், 
  • மென்மையான மனம்,
  • எளிமையான வாழ்க்கை, 
  • சிறந்த தோற்றம்,
  • வளிமையான வாழ்க்கை

வினையடை – Adjectives that describe a verb

வினைச்சொற்களின் பண்பையும், சிறப்பையும் குறிக்க பயன்படும் அடைமொழி வினையடை என்று சொல்லப்படுகிறது.

  • சேது மேலே சென்றார். 
  • ராமன் நன்கு விளையாடினான். 
  • கோதை வேகமாக நடந்தாள்.
  • கேசவன் நன்றாக பாடினான்.

இவற்றில் ‘மேலே’ என்பது சென்றார் என்னும் வினைச்சொல்லின் பண்பை குறிக்கிறது. அதே போல், நன்கு என்பது ‘விளையாடினான்’ என்னும் வினைச்சொல்லின் சிறப்பை குறிக்கிறது. இவை வினையடை என்று இலக்கணத்தில் சொல்லப்படுகின்றன.

பெயரடையை போலவே, வினையடை இரண்டு வகைப்படும். அவை,

  1. தனி வினையடை
  2. கூட்டு வினையடை அல்லது ஆக்க வினையடை

2.1 தனி வினையடை

வினைச்சொல்லை குறிக்க அடைமொழியை பயன்படுத்தும் போது, வாக்கியத்தில் உபயோகிக்கப்படும் வினையடை தனிச்சொல்லாக அமைந்தால், அது தனி வினையடை என்று கொள்ளப்படும்.

உதாரணத்திற்கு, 

சேது மேலே ஏறினான். 

ராதா காலையில் வருவாள்.

தமிழ் உள்ளே வந்தான்.

மேலே உள்ளவற்றில் வருகின்ற ஏறினான், வருவாள், வந்தான் என்னும் வினைச்சொற்களின் குணங்களை வர்ணிக்க ‘மேலே’, ‘காலையில்’, ‘உள்ளே’ என்னும் சொற்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இவை தனித்து இயங்கக் கூடிய வினைச்சொற்கள் என்பதால், தனிவினையடை என்று இலக்கணத்தில் சொல்லப்படுகிறது.

2.2 கூட்டு வினையடை அல்லது ஆக்க வினையடை

வினைச்சொல்லை குறிக்க அடைமொழியை பயன்படுத்தும் போது, வாக்கியத்தில் உபயோகிக்கப்படும் வினையடை தனிச்சொல்லாக இல்லாமல், கூட்டுச் சொல்லாக அமைந்தால், அது கூட்டு வினையடை அல்லது ஆக்க வினையடை என்று கொள்ளப்படும்.

உதாரணத்திற்கு, 

மாணவன் நன்றாக பாடினான். 

ராதா இனிமையாக பேசினான்.

பாட்டி நிதானமாய் நடந்தார்.

மேலே உள்ளவற்றில் வருகின்ற பாடினான், பேசினான், நடந்தார், என்னும் வினைச்சொற்களின் குணங்களை வர்ணிக்க ‘நன்றாக’, ‘இனிமையாக’, ‘நிதானமாய்’ என்னும் சொற்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. 

நன்றாக – நன்று + ஆக,

இனிமையாக – இனிமை + ஆக,

நிதானமாய் ‍- நிதானம் + ஆய்,  

வினைச்சொற்களின் பண்பை விளக்க‌, ‘ஆக’, ‘ஆய்’ என்னும் விகுதிகள் கூட்டு சேர்ந்து வருவதால், கூட்டு வினையடை அல்லது ஆக்க வினையடை என்று இலக்கணத்தில் சொல்லப்படுகிறது.

Learn Tamil Online

If you are looking forward to learning Tamil grammar in deep, our online Tamil classes are just for you. Through our online Tamil classes, we help children learn Tamil online from anywhere, anytime. All our classes are handled by native Tamil speaking teachers. That more than 93% of our students learn Tamil in less than 90 days speak volumes about the quality of our teaching. 

We ensure that all our tutors have a rich knowledge in Tamil literature, and are experienced in handling children. We allot tutors to the classes based on the requirement of the learner. In case, the learner is not comfortable with the tutor allotted, the learner is always free to request for a change. We also offer a free demo at the beginning. 

This way, we ensure that our classes are meeting the expectations and requirements of the learner. Because it is customized and one-on-one, children and adult learners get an opportunity to interact with the teacher in Tamil. This helps them improve their fluency in speaking and writing eventually. 

For more information on our Tamil classes, visit www.powerkidtamil.com

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Talk to a Tamil language advisor​

Know our curriculum, offers and tutors.

Also ask for the free demo class.

Want to Know More?

Fill the Form to know more details on the course