Blog

நால்வகைச் சொற்கள் யாது?

நால்வகைச் சொற்கள் யாது?
Tamil Language

நால்வகைச் சொற்கள் யாது?

Words in English are called ‘சொல்’ in Tamil. Knowing about the types of words is key to Tamil grammar. Read the blog to know more.

Words form the foundation of any language in both written as well as spoken forms. In Tamil, we term a word as சொல் (sol). When we add them together, they form a sentence, as is the case with any language. They make up the meaningful portion of a sentence, and are separated by space or commas. Learning about words, its formation and types is important in gaining an understanding of grammar. 

At Powerkid Tamil Academy, as a part of our online Tamil classes, we teach characteristics of சொல் in complete detail. Aspirants who opt to learn Tamil online through our classes get an opportunity to learn about these in detail during the advanced stages. 

This blog presents the meaning of word is Tamil, and the types. 

சொல் – சொற்றொடர் விளக்கம்

சொல் என்பது எழுத்துக்களால் ஆனது. எழுத்துக்கள் தனித்து நின்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் தொடர்ந்து வந்தோ ஒரு பொருளை உணர்த்தும். சொல்லிற்கு பதம், மொழி, கிழவி என்று வேறு பெயர்களும் உண்டு. சொற்களை கோர்த்து சொற்றொடர் அமைக்கப்படுகிறது. இந்த சொற்றொடர் வாயிலாக கருத்துகளும் செய்திகளும் தெரிவிக்கப்படுகிறது. 

 நால்வகைச் சொற்கள் யாவை?

 சொற்கள் நான்கு வகைப்படும். அவை, 

  • பெயர்ச்சொல்
  • வினைச்சொல்
  • இடைச்சொல்
  • உரிச்சொல்

அடுத்து நால்வகைச் சொற்கள் பற்றி விரிவாக பின் வரும் பகுதியில் காண்போம்..

பெயர்ச்சொல் (Noun)

ஒன்றன் பெயரை உணர்த்தும் பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் அது ஏற்கும் பொருளின் அடிப்படையில் ஆறு வகைப்படும். அவை,

  • பொருட்பெயர்
  • இடப்பெயர்
  • காலப்பெயர்
  • சினைப்பெயர்
  • குணப்பெயர்
  • தொழிற்பெயர்

1.1 பொருட்பெயர் (Thing)

பொருட்பெயர் ஒரு பொருளைக் குறிக்கும் . இது இருவகைப்படும்.

உயிருள்ள பொருள்: (எ.கா.) நாய், பலாமரம், வேலன்.

உயிரற்ற பொருள்; (எ.கா.) கல், நீர், காற்று.

உதாரணம்: முல்லை

முல்லை என்பது மணம்மிக்க மலரை உடைய ஒரு கொடியின் பெயர். கொடி என்பது ஒரு பொருள் ஆதலால் இது ஒரு பொருட்பெயர்.

1.2 இடப்பெயர் (Place)

இடப்பெயர் ஓரிடத்தைக் குறிக்கும்.

உதாரணம்: பள்ளி

பள்ளி என்பது கல்வி பயிலும் ஓர் இடத்தைக் குறிக்கும். எனவே இச்சொல் இடப்பெயர் ஆகும்.

1.3 காலப்பெயர் (Time)

காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும். கண் இமைக்கும் நொடி பொழுது முதல் ஊழிக்காலம் வரை அனைத்தும் காலப்பெயர் ஆகும்.

உதாரணம்: நிமிடம்

நிமிடம் என்பது கால அளவைக் குறிப்பிடுவதால் காலப்பெயர் ஆகும்.

1.4 சினைப்பெயர் 

சினை என்பது ஒன்றனது உருப்பைக்குறிக்கும். சினைப்பெயர் முழுமையான ஒன்றின் பகுதிகளை குறிக்கும். 

விலங்கு உறுப்புகள், தாவர பகுதிகள், மனித உறுப்புகள், பொருள்களின் பகுதிகள் போன்றவற்றை குறிக்கும் பெயர்கள் சினைப்பெயர்கள் ஆகும்.

 உதாரணம்: தண்டு, இலை, கண், கொழுந்து, மூக்கு, வேர்.

 கண் என்பது காண்பதற்க்கு உதவும் முகத்தின் ஒரு அங்கமாகும் எனவே இது ஒரு சினைப்பெயர்.

 1.5 குணப்பெயர் (Character)

நிறம், சுவை, அளவு, வடிவம் ஆகியவற்றின் அடிப்படையில் குணப்பெயர்கள்  வழங்கப்படும்.

உதாரணம்: பத்து கிலோ அரிசி, ஐந்துபடி எண்ணெய், பத்து மீட்டர் துணி.

கார் என்னும் சொல் கருப்பு என்னும் நிறத்தை குறிக்கும் எனவே இது ஒரு குணப்பெயர்.

1.6 தொழிற்பெயர்

தொழிற்பெயர்கள் செய்யும்தொழிலைக் குறிக்கும்.

உதாரணம்:  நடத்தல், ஆட்டம், படித்தல், கற்பித்தல், பாடல்.

படித்தல் என்பது படிக்கும் செயலைக் குறிக்கும் பெயர்ச்சொல். வினை செயல் தொழில் என்பவை ஒரே பொருளை குறிக்கும். எனவே படித்தல் என்பது தொழிற்பெயர் ஆகும்.

வினைச்சொல் (Verb)

வினை என்பது செயல் என்று பொருள் கொண்ட சொல்.  வினைச்சொல் ஒரு பொருளின் செயலை உணர்த்தும் சொல் ஆகும்.

 உதாரணம்: 

 கிருஷ்ணன் பாடினான்.

 தேவன் ஆடினான்.

இத்தொடர்களில்   கிருஷ்ணன், தேவன் என்பன பெயர்ச்சொற்கள் (Nouns). பாடினான், ஆடினான் ஆகிய சொற்கள் பாடுதல், ஆடுதல் ஆகிய செயல்களைக் குறிப்பதால், இவை வினைச்சொற்கள் (Verbs). 

இடைச்சொல்

தனித்து நின்று பொருள் தராத சொற்கள் இடைச்சொற்கள் ஆகும். இடைச்சொல் பெயரும் வினையும் சார்ந்து நின்று இலக்கண பொருள் தரும். உணர்ச்சிகளையும், கருத்துகளையும், மிகத்தெளிவாகவும் சுருக்கமான முறையிலும் வெளிப்படுத்தவும், பொருள் வேறுபாடுகளை உணர்த்துவதற்கும் இடைச்சொல பயன்படும்.

 உதாரணம்:  

 இராமனைப்(ஐ) பார்த்தேன். 

 தம்பியும்(உம்) வந்தான்.

 ‘ஐ’, ‘உம்’ என்னும் இணைப்பு இடைச்சொற்கள் தென்படுகிறது.

உரிச்சொல்

பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல். பலவகைப்பட்ட பண்புகளைக் கொண்டு பெயர் சொற்கள், வினைச் சொற்களைவிட்டு நீங்காது செய்யுளுக்கே உரிமை பெற்று வரும்.

உதாரணம்:  

மா- மாநகர் (மா – இதன் பொருள் பெரிய),

சால- சாலச்சிறந்தது

இதிலுள்ள ‘ மா’, ‘ சால’ என்பது உரிச்சொல்லாக வருகிறது.

Learn Tamil Online

Become proficient in Tamil grammar by learning more Tamil words and knowing their meanings. Powerkid Tamil Academy teaches basic grammar and vocabulary to kids using an innovative approach. We adopt the LSRW (Listening- Speaking- Reading- Writing) framework to impart Tamil language and its intricacies as a part of our online Tamil classes. This framework imparts necessary skills and knowledge following a structured approach.

Powerkid Tamil Academy offers one-on-one, completely customised, online Tamil classes to help aspirants improve their Tamil fluency. Our teachers are well experienced and know the in and out of the Tamil language. Becasues it is one-on-one, direct classes, students and learners get an opportunity to initate conversations and engage through the Tamil medium. This helps in improving their speaking skills in Tamil language. 

If you are looking for an opportunity to learn Tamil online from anywhere, anytime, Powerkid Tamil is the perfect place for you. 

For online Tamil classes, sign up through our website, www.powerkidtamil.com. Or talk to us at +91 74033 33135.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Talk to a Tamil language advisor​

Know our curriculum, offers and tutors.

Also ask for the free demo class.

Want to Know More?

Fill the Form to know more details on the course